Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தான் ஆட்சியில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதிமொழியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்க வேண்டும் எனப் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவ வீரர்களுக்கு உண்மையாகவே கௌரவம் செலுத்த ஜனாதிபதிக்குத் தேவைப்பாடு இருக்குமாயின், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரையும் முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இராணுவ வீரர்களின் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவே இராணுவ வீரர்களுக்குச் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாகும்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுக்குச் சமுகமளிப்பதற்கு முன்னர், பொய்க் குற்றச்சாட்டுகள் என நன்றாக உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மட்டுமே, நீங்கள் உண்மையாகவே இராணுவ வீரர்களை மதிக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

வடகிழக்கு எங்கும் நேற்றைய தினம் விடுதலைப் புலிகளின் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டதை நாம் கண்டோம். அன்று வடகிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த புலிகளின் நினைவேந்தல்கள், இன்று இலங்கை முழுவதிலும் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளன. இவ்வாறான பலவீனமான, முதுகெலும்பற்ற ஒரு தலைவரின் கீழ் மாத்திரமே ஒரு நாட்டுக்குள் பயங்கரவாதிகளைப் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூர முடியும்.

அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட, மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த நாசி கட்சியின் தலைவர் ஹிட்லரையோ அல்லது நாசி கட்சியையோ நினைவுகூருவதற்கு இன்றைய ஜெர்மனியில் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அதேபோன்று, நவீன உலக வரலாற்றின் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகளை அமெரிக்காவில் நினைவுகூருவதற்கு அங்கு இடமளிப்பதில்லை.

இன்று முள்ளிவாய்க்காலில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இடங்களும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் புலிக்கொடிகளின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுதான் இந்த நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் நினைவுகூரும் போது, அந்தப் புலிகளால் தமது உயிர்களையும், கை கால்களையும் இழந்த எமது நாட்டு இராணுவ வீரர்களையும் ஒட்டுமொத்த தேசத்தையும் பலவீனமாக அதனைப் பார்த்துக் கொண்டிருக்குமாறு இந்த அரசாங்கம் நிர்பந்தித்துள்ளது.

புலிகளைச் சுதந்திரமாக நினைவு கூற இடமளிப்பது ஒருபுறமிருக்க, எமக்கு உயிர்பிச்சை அளித்து, ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடைப்பயிற்சி செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த எமது நாட்டு இராணுவ வீரர்களை நினைவு கூரும் தேசப்பற்றாளர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தனது அதிகாரிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தச் சென்ற போது, பயங்கரவாதிகளை ஒடுக்குவது போன்ற பாணியிலேயே பொலிஸார் அவரைத் தடுக்க முயன்றதை நாம் கண்டோம். நன்றியுள்ள மனிதர்கள் இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவது தண்டனைக்குரிய குற்றமா, கைகளில் விலங்கிடப்படும் குற்றமா அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் குற்றமா என்று நாம் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகின்றோம்.

எனவே ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஒன்று நாட்டின் பக்கம் நிற்க வேண்டும், அல்லது பயங்கரவாதிகளின் பக்கம் நிற்க வேண்டும். பயங்கரவாதிகளுடன் நயவஞ்சகமாக உறவாடிக்கொண்டு, நாட்டின் பக்கம் நிற்பது போன்ற கபடத்தனமான இருமுகக் கொள்கையை இனிமேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு இடமளிக்கத் தயாராக இல்லை. அதனால், இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொண்டிருக்காமல், நாட்டின் உண்மையான முப்படைத் தளபதியாக உங்கள் இரு கால்களையும் நாட்டின் பக்கமே நிலைநிறுத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
Next Post
போர் நினைவிட முறுகல்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட வாய்ப்பு!

போர் நினைவிட முறுகல்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.