யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனினால் இந்த புதிய உயர்பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்ட இவ்விரு உயர் அதிகாரிகளுக்குமான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் விசேட நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (19) ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









