Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

4 months ago
in செய்திகள்

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு, குடும்பஸ்தர் ஒருவர் இன்று (20) காலை 9.30 மணியளவில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் புறப்படுவதற்காகத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் (Start) செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்தின் தடையாளி (Hand Brake) சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்து திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது. இதனால் பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது.

இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இக்கோர விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட், சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், திருமணம் முடித்து தற்போது வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவருமான 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வட்டாரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் குழாய் நீர் அகழும் விசேட வேலைத்திட்டம் ஒன்றிற்காக, தனது பணிக்குரிய குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்திருந்த போதே அவருக்கு இந்தத் துயரமான முடிவு நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகப் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரினால் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.