Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவருக்கு 1 இலட்சம் சன்மானம்; தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

இலஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவருக்கு 1 இலட்சம் சன்மானம்; தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

4 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தில் இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இலஞ்சம் கோரினால் பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்ட தகவலின்படி, எந்தத் துறையிலும் பணம் கேட்டு தாமதம் ஏற்படுத்தப்படுகிற சூழ்நிலையில், அதனை புகைப்படம், வீடியோ அல்லது பிற ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லஞ்ச நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக அரசு கூறுகிறது.

இதேவேளை, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியேற்ற பின்னர் நிர்வாக மாற்றங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து, 9 அமைச்சர்களும் தங்களது அலுவலக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் தனது ஆரம்பகால உரையில், அடுத்த சில மாதங்களுக்குள் நிர்வாகத்தில் உள்ள இலஞ்ச முறைகள் பெரிதும் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிர்வாகத் துறைகளில் கண்காணிப்பு மற்றும் புகார் முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இலஞ்சம் தொடர்பான புகார்களை வழங்கும் பொதுமக்களுக்கு 1 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் பொதுமக்கள் அதிகளவில் புகார் அளிக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் நேர்மையான பணியாற்றலை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே அரசின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்!

மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு