Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கங்காராம விகாரையின் வெசாக் ஏற்பாடு தீவிரம்; மின்சாரம்–எரிபொருள் சிக்கனத்துடன் இம்முறை விழா நடத்த தீர்மானம்

கங்காராம விகாரையின் வெசாக் ஏற்பாடு தீவிரம்; மின்சாரம்–எரிபொருள் சிக்கனத்துடன் இம்முறை விழா நடத்த தீர்மானம்

4 months ago
in செய்திகள்

கொழும்பு கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற ‘புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின்’ (Buddha Rashmi Vesak Zone) ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் அக்காலாப்பகுதியில் மின்சக்தி பயன்பாட்டை முகாமைத்துவம் செய்தல் ஆகிய விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதிப் பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் (Temple Trees) பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்ற போதே இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெசாக் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டின் பொதுவான எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டுக்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த சில கடுமையான விதிமுறைகளை, தற்காலிகமாகத் தளர்த்துவது குறித்து இதன்போது அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், வெசாக் வலயப் பணிகளை எவ்விதத் தடங்கலுமின்றி வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கும், பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களின் அதிகாரிகள் பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் தற்காலிகப் பொருளாதார மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை அதியுச்ச சிக்கனத்துடன் பயன்படுத்துவதற்குக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுடன், பௌத்த தர்மத்தின் கொள்கை வழிபாட்டிற்கு (Prathipaththi Pooja) முதலிடம் வழங்கி, அதேநேரம் ஆமிச வழிபாட்டின் (Aamisa Pooja) மூலம் பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் இம்முறை வெசாக் வலயத்தை எளிய முறையில் அலங்கரிப்பதற்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், மின்சார விரயத்தைத் தவிர்க்கும் நோக்கில், இம்முறை வெசாக் வலயக் காட்சிகள் அனைத்தும் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்காக நடத்தப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

September 10, 2026
பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!
செய்திகள்

பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!

September 10, 2026
Next Post
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் பிரச்சினை உள்ளது-ஆனால் அவை தரமற்றவை அல்ல; எரிசக்தி பிரதி அமைச்சர்

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் பிரச்சினை உள்ளது-ஆனால் அவை தரமற்றவை அல்ல; எரிசக்தி பிரதி அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு