Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்; திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்; திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர்மாய்ப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சீதனக் (வரதட்சணை) கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, திருமணமான நான்கே மாதங்களில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மன விரக்தியடைந்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சோகச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே இத்திருமணத்தைக் கணவனின் தாயார் (மாமியார்) மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன், அப்பெண்ணிடம் 25 பவுண் தங்க நகையையும், ஒரு வீட்டையும் சீதனமாகக் கொண்டு வருமாறு மாமியார் தொடர்ந்து வற்புறுத்தி நச்சரித்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, நலிவுற்ற குடும்பம் என்பதால், மாமியார் கேட்ட பாரிய சீதனத்தை அவர்களால் வழங்க முடியாமல் போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது தாயார் கேட்ட சீதனத்தை வழங்காவிட்டால் தான் வீட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவேன் எனப் பெண்ணின் கணவர் மிரட்டியுள்ளார். இதனால், தனது கணவரை வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என அப்பெண் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட போதிலும் கணவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

காதலித்துக் கைபிடித்த கணவனும், புகுந்த வீட்டினரும் சீதனத்தை முன்னிறுத்தித் தனிமைப்படுத்தியதாலும், கணவனின் வெளிநாட்டுப் பயண மிரட்டலாலும் கடும் மன உளைச்சலுக்குள்ளான அந்த இளம் பெண், நேற்று காலை தனது வீட்டில் வௌ்வேறு வழியின்றித் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான உத்தியோகபூர்வ மரண விசாரணைகளை யாழ்ப்பாணப் பிராந்திய திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலதிகப் புலனாய்வு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
ராஜபக்ஷக்களிடமிருந்து விலகி அனுரவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அம்பிட்டிய தேரர் அறிவிப்பு

ராஜபக்ஷக்களிடமிருந்து விலகி அனுரவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அம்பிட்டிய தேரர் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு