Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (22) விசேட அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

அப்பகுதிக்குப்பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) அடங்கிய குழுவினர், குறித்த வர்த்தக நிலையத்தில் இந்தத் திடீர்ச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இச்சோதனையின் போது, துர்நாற்றம் வீசிய நிலையிலும், நிறம் மாறியும், கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடனும் காணப்பட்ட 18 கலன்களில் (Cans) சேமித்து வைக்கப்பட்டிருந்த 286 கிலோகிராம் தேங்காய் எண்ணெய் கண்டறியப்பட்டது. மேலும், அந்த எண்ணெய்க் கலன்களில் தயாரிப்பு விபரங்கள் அடங்கிய லேபிள்கள் (Labels) எவையும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த 286 கிலோகிராம் தேங்காய் எண்ணெய்யையும் அதிகாரிகள் கைப்பற்றியதுடன், களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 40,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய்யை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தத் தரமற்ற எண்ணெய் உடனடியாக அழிக்கப்பட்டதாகக் களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த. கஜனன் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
தேங்கிக் கிடக்கும் 1 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்; ஜூன் 30க்குள் பெற்றுக் கொள்ளுமாறு அவசர அறிவிப்பு!

தேங்கிக் கிடக்கும் 1 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்; ஜூன் 30க்குள் பெற்றுக் கொள்ளுமாறு அவசர அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு