Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்!

மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் (கச்சா எண்ணெய்) விலைகள் கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அதே நேரத்தில், இந்த நேர்மறையான அரசியல் நகர்வுகள் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வைக் பதிவு செய்துள்ளன.

ஈரான் அரசுடனான அமைதி ஒப்பந்தம் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்றும், அதன் முழுமையான விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். எனினும், அதற்கு அடுத்த நாளே, இந்த உடன்படிக்கையை அவசரப்பட்டு முடிக்க வேண்டாம் என்று தனது நாட்டின் பேச்சுவார்த்தைக் குழுவை அவர் வலியுறுத்தியுள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறானதொரு தற்காலிகத் தேக்கநிலைக்கு மத்தியிலும், நேற்று (24) காலை ஆசிய சந்தை நிலவரங்களின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை 5% இனால் சரிந்து பேரல் ஒன்று 98.36 டொலராகப் பதிவாகியிருந்தது. அதேநேரம், அமெரிக்க சந்தையில் வர்த்தகமாகும் மசகு எண்ணெய் (WTI) விலை 5.3% இனால் சரிந்து பேரல் ஒன்று 91.50 டொலராகக் காணப்பட்டது.

உலகளாவிய முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகச் சேர்க்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் இதற்கு முன்னர் கூறியிருந்த போதிலும், அதுகுறித்த கூடுதல் விபரங்கள் எதனையும் அவர் தற்போது வரை வெளியிடவில்லை.

உலகின் மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) ஐந்தில் ஒரு பகுதி பொதுவாகக் கடந்து செல்லும் இந்த மிகக் குறுகிய, அதேநேரம் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை, கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மத்திய கிழக்கில் மோதல்கள் தொடங்கியதில் இருந்து முற்றாக மூடப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதன் காரணமாகவே, உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் மற்றும் முதலீட்டுப் பிரிவுகள் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
Next Post
வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி யாழ் சிறைச்சாலையினுள் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி யாழ் சிறைச்சாலையினுள் உயிர்மாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு