Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி யாழ் சிறைச்சாலையினுள் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி யாழ் சிறைச்சாலையினுள் உயிர்மாய்ப்பு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கைதியாக இருந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவர் சிறைச்சாலையினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர், நேற்று முன்தினம் (24) இரவு சிறைச்சாலை வளாகத்தினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியான சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு (துன்புறுத்தலுக்கு) உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொடூரக் கொலை வழக்குத் தொடர்பாக மேல் நீதிமன்ற நீதவான்கள் மூவர் அடங்கிய விசேட ‘ட்ரயல் அட் பார்’ (Trial-at-Bar) தீர்ப்பாயத்தின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய, கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் பூபாலசிங்கம் ஜெயக்குமார் (சுவிஸ் குமாரின் சகோதரர்) உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன் பின்னர், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராகக் கைதிகள் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இவர்களுக்கான மரண தண்டனையை அண்மையில் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதியின் தற்கொலைச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
Next Post
மட்டு நகர் வாவியில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

மட்டு நகர் வாவியில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு