Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிக்கோயா வயோதிப தம்பதி இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

டிக்கோயா வயோதிப தம்பதி இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

3 months ago
in செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (24) ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள், கடந்த வியாழக்கிழமை (21) 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவியான 82 வயதுடைய சகுந்தலாதேவி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில், வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த மூடிய சுற்றுக்காட்சி (CCTV) கேமராக்களில் பதிவான காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில், இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகி மறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (23) மாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கடந்த 21 ஆம் திகதி வயோதிப தம்பதியினரை படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியிருந்தார்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பதுளை – ஹாலிஎல – தெமோதறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இந்தச் சந்தேகநபர், கொழும்பில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் காதல் தொடர்பைப் பேணி வந்துள்ளார். குறித்த பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் தம்பதியினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு