Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

மட்டு நகர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (27) மாலை சுமார் 4.00 மணியளவில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை வீதியில் அமைந்துள்ள “கோ-ஆப் இன்” விடுதியின் அறை இலக்கம் 107-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அங்கு தங்கியிருந்த 5 வயதுடைய சந்தனி நிமாஷா மற்றும் 3 வயதுடைய கசுன் மதுசங்க ஆகிய இரண்டு குழந்தைகள் புகை மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகள் தங்கள் தந்தையுடன் கடந்த 23ஆம் திகதி முதல் குறித்த விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காத்தான்குடியில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தாயை பார்க்கவே குறித்த குடும்பம் பதுளைலிருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, குழந்தைகளின் தந்தை மதுபானம் அருந்துவதற்காக பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் அறையை விட்டு வெளியேறியுள்ளார். செல்லும் முன் இரண்டு குழந்தைகளையும் அறைக்குள் பூட்டிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் திரும்பிய போது அறையில் தீ பரவி இருந்ததையும், இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் காணப்பட்டதையும் அடுத்து உடனடியாக மட்டக்களப்பு அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதியின் உணவகப் பகுதியில் ஏற்பட்ட தீயை விடுதி ஊழியர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் தற்போது மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.