Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
IMF கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர்!

IMF கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர்!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இதுவரை இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விசேட வரைவு உரிமைகள் (Special Drawing Rights) அடிப்படையிலான நிதி வசதிக்கான உடனடி அணுகல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வை, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நேற்று (27) நிறைவு செய்தது.

அதன்படி, இந்த கடன் திட்டத்தின் கீழ் இலங்கை வலுவான செயல்திறனைக் கொண்டுள்ளதாக அந்த நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் மற்றும் செலவுகளை ஈடுசெய்யும் வகையிலான மின்சாரக் கட்டண முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளது.

இருப்பினும், புதிய வெளிநாட்டுச் செலுத்துச் சமநிலை நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்த்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்காமை அல்லது தீவிரப்படுத்தாமை தொடர்பான தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோல்களை இலங்கை பூர்த்தி செய்யவில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

October 26, 2026
மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு
காணொளிகள்

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு

October 26, 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

October 26, 2026
கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி
உலக செய்திகள்

கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி

October 26, 2026
Next Post
களுத்துறை வர்த்தகர் கொலை; துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு!

களுத்துறை வர்த்தகர் கொலை; துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு