கனடாவில் மற்றும் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஐ.எம்.எஸ் என்ற அமைப்பு அதற்கான திட்டம் இல்லாது இரு நாட்டு அரசுகளுடன் பேசாது ஒரு உத்தரவாதம் இன்றி மக்களிடம் வசூலித்து வருகின்றனர்.
எனவே இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை உடன் நிறுத்த வேண்டும், வசூலித்த பணம் எவ்வளவு என உடன் அறிவிக்க வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் சனிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடாவில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஐ.எம்.எஸ் என்ற அமைப்பு பணம் வசூலித்து வருவது தொடர்பாக சில சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பாக இந்தியா திருச்சி மற்றும் புலால் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் தாய் நாட்டுக்கு வரப்போகின்றோம் அதற்கான ஆயத்தங்கள் செய்து தருமாறு என்னுடன் தொடர்பு கொண்டு கோரியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் மாதம் இந்தியாவுக்கு குழு ஒன்றுடன் செல்லவுள்ளேன் அப்போது அனைத்து முகாம் களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்.
இந்த நிலையில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பும் பாதயாத்திரையாக சென்று பணம் வசூலிக்கின்றனர் இது கனடாவில் மாத்திரம் அல்ல பலர் ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறு பணம் வசூலித்து வருகின்றனர்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,








