138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று (28) அதிகாலை சுமார் 1.30 மணியளவில், கோலாலம்பூரிலிருந்து வந்த OD 297 விமானத்தில் வந்த 14 சீன நாட்டினரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் Green Channel வருகை முனையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையின்போது, 14 பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 138,200 சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் 20.73 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க விசாரணைகளுக்குப் பிறகு, அந்தப் பொருட்கள் அரசுடமையாக பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.








