Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 1 முதல் மே 28 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,010,807 ஆக பதிவாகியுள்ளது.

மே மாதத்தின் தொடக்கம் முதல் மே 28 வரை மட்டும் 134,530 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 56,063 ஆகும். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,582 பேரும், சீனாவிலிருந்து 8,439 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பிய நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவிலிருந்து 245,981 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 97,427 பேரும், ரஷ்யாவிலிருந்து 75,963 பேரும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அத்துடன், இந்த ஆண்டில் அதிகபட்ச மாதாந்திர சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளது. அம் மாதத்தில் 277,327 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

எனினும், பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் படிப்படியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
ஏறாவூரில் 11 வயது சகோதரியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது!

ஏறாவூரில் 11 வயது சகோதரியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு