Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்

‘திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) பெறுமதியான விசேட அபிவிருத்தித் திட்டத்திற்கான ஒப்பந்தம் நேற்று (29) கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் கையெழுத்திடப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாடா மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர ஷரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்திற்கான முழுமையான நிதி உதவியை ஜப்பானிய அரசாங்கம் வழங்கவுள்ளதுடன், தொழில்நுட்ப ஆதரவை FAO வழங்கவுள்ளது.

திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் வளர்ப்பு கூடுகள் நிறுவப்படவுள்ளதுடன், தேவையான தடுப்பு வலைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், இங்கிணியாகல மீன் இனப்பெருக்க நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மீனவ சங்கங்களுக்கு கூண்டு மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், முதற்கட்ட மீன் வளர்ப்பிற்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் உணவுகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறைந்த செலவில் புரதத் தேவையை பூர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நவீன கூண்டு மீன் வளர்ப்பு முறை பெரும் பங்களிப்பை வழங்கும் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நன்னீர் மீன்பிடித் துறையை வலுப்படுத்துவது இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும் என ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாடா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு