Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

3 months ago
in செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், தேர்தலை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன், பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார் என்றார்.

எனினும், அப்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதனை 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எடுத்துக்கொள்ளாததால், அந்தப் பிரேரணை நடைமுறைக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆண்டு தாம் சமர்ப்பித்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை தற்போது விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் மக்களிடம் உறுதியளித்திருந்ததாக சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார். அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகத்தில் மாகாண சபைகள் முக்கிய பங்காற்றுவதால், அந்த இரண்டு மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் கூறினார்.

பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டை பல்வேறு அரசியல் தரப்புகளும் ஆதரித்து வருவதாகவும், சட்டமா அதிபர் திணைக்களமும் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அதேபோன்ற பரிந்துரையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு, மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.