Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

3 months ago
in செய்திகள்

உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பதிவாகி வரும் மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

அதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்திய அவர், சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், எபோலா வைரஸ் தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையான அறிவுறுத்தல்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சில ஆபிரிக்க நாடுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட எபோலா நோயை உலக சுகாதார நிறுவனம் அவசர சுகாதார நிலைமையாக அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கையின் சுகாதார அமைப்பும் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மெனிஞ்சைடிஸ் நோய் தொடர்பில், முதல் நோயாளி அடையாளம் காணப்பட்ட நாளிலிருந்தே தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதன் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற தான்சல் நிகழ்வுகளில் குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் போன்ற சூடான பானங்களை வழங்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நோய் பரவல் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், மக்கள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு