Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதிக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதிக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்களின் திடீர் இடமாற்றம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து தங்களது அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சங்கத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வட மாகாண ஆளுநருக்கு எதிரான சில வழக்குகளில் நீதிபதி வழங்கிய உத்தரவுகளே இந்த இடமாற்றத்திற்கான காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் அந்த உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டதுடன், அவை நீடிக்கப்படவும் இல்லை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வட மாகாண ஆளுநர் அரசாங்கத்தின் சில உயரதிகாரிகள் மற்றும் அமைச்சரொருவரின் தலையீட்டை நாடியதாகவும், அதுகுறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவின் இடமாற்ற அதிகாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள சங்கம், திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்கள் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

நீதித்துறையின் செயற்பாடுகளில் நிர்வாகத் துறையின் தலையீடு இடம்பெற்றதாக தோன்றும் சூழ்நிலையே மிகவும் கவலைக்குரியது என்றும், இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் நேரடியாக விளக்கமளிக்கும் நோக்கில் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பையும் வழங்குமாறு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் கோரியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
ஒலுவில் துறைமுக விவகாரத்தில் அஷ்ரப் மீது குற்றச்சாட்டு சுமத்துவது வரலாற்றைத் திரிப்பதாகும்; எச்.எம்.எம். ஹரீஸ்!

ஒலுவில் துறைமுக விவகாரத்தில் அஷ்ரப் மீது குற்றச்சாட்டு சுமத்துவது வரலாற்றைத் திரிப்பதாகும்; எச்.எம்.எம். ஹரீஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு