இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் அவர் “மௌலவி” என குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இறக்காமம் பிரதேச கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (01) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், குறித்த சந்தேகநபர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் கல்வி கற்று பட்டம் பெற்ற மௌலவி அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிலோ அல்லது அதன் இறக்காமம் கிளைச் சபையிலோ உறுப்பினராக இல்லையெனவும் அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களை நம்பாமல், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ளுமாறு உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.








