Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு; பணவீக்கம் 7% வரை அதிகரிக்கும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர்

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு; பணவீக்கம் 7% வரை அதிகரிக்கும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழலும், அண்மைய எரிபொருள் விலை உயர்வும் இலங்கையின் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (01) இரவு ஒளிபரப்பான ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போது 5.4 முதல் 5.5 சதவீதமாக காணப்படும் பணவீக்கம் எதிர்வரும் காலங்களில் 7 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது நீடித்துவருவதால் உலகளாவிய எரிபொருள் சந்தையிலும், அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வுடன், உள்நாட்டு நுகர்விலும் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படாத நிலை காணப்படுவதால் பணவீக்க அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை மேலும் இறுக்கமாக்கியதாகவும், அடுத்த சில மாதங்களில் தேவையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், சட்டபூர்வமான வருமானத்தை வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு எந்தவித தடையும் இல்லை எனத் தெரிவித்த ஆளுநர், நாட்டின் பணமோசடி தடுப்பு சட்டங்களின் கீழ் சட்டவிரோத நிதி பரிமாற்றங்களுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
வல்வெட்டித்துறையில் 1 கோடி 15 இலட்சம் ரூபா திருட்டு; 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது!

வல்வெட்டித்துறையில் 1 கோடி 15 இலட்சம் ரூபா திருட்டு; 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு