பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இரு தரப்பினரின் வாய்மூல வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாக உத்தரவிட்டது.








