அமெரிக்க அரசாங்கத்தின் நன்கொடையாக இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளன.
இலங்கை விமானப்படையின் நீண்டகால செயற்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அதன் விமானப் படையின் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஹெலிக்கொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை வந்தடைந்துள்ள ஹெலிக்கொப்டர்கள் தற்போது ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து தொழில்நுட்ப சோதனைகளும் நிறைவடைந்த பின்னர், அவை உத்தியோகபூர்வ சேவைகளில் இணைக்கப்படவுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிக்கொப்டர்கள் விமானி பயிற்சி நடவடிக்கைகள், அனர்த்த நிவாரணப் பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான சேவைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.








