காலி – கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சாரதிக்கு திடீரென ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக பேருந்தின் கட்டுப்பாடு இழக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக பேருந்து வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த மோதலால் பேருந்துக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த மூவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








