Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

4 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை அறிவித்தார்.

இந்த அதிகரிப்பின் மூலம் 502,836 விவசாயிகள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டார். இதற்காக அரசாங்கம் 10,947 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், மானியத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சந்தை விலை உயர்ந்தாலும், முழு யால பருவத்திலும் நெல் விவசாயத்திற்குத் தேவையான ஒரு மூட்டை யூரியா உரத்தை 10,200 ரூபாய் என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். இந்த உரம் விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு இப்பருவம் முதல் உர மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வழமையை விட சுமார் 2,500 மில்லியன் ரூபாய் கூடுதலாக அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை யால பருவ நெற்செய்கை 409,670 ஹெக்டேயர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 364,900 ஹெக்டேயருக்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம் திறப்பு விழா
செய்திகள்

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம் திறப்பு விழா

June 5, 2026
Next Post
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு