பாணந்துறை குருப்புமுல்ல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, வீடு ஒன்றிலிருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், 9 மில்லிமீட்டர் ரக 09 தோட்டாக்களும், டி-56 ரக 49 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரிடமிருந்து 04 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருளை அளவிட பயன்படுத்தப்பட்ட மின்சாரத் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








