Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காலி – தெவட்ட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவலின்படி, இலங்கையின் 5,000 ரூபாய் நாணயத்தாளைப் பார்க்க விருப்பம் இருப்பதாகக் கூறிய சந்தேக நபர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரின் கையில் இருந்த பணத்தாள்களைத் தொட்டபோது, மேஜிக் வித்தையை பயன்படுத்தி ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த மாதம் முதலாம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஊழியர் நிலைய முகாமையாளருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, காலி துறைமுகப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, காலி துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் மெஷான் இந்திரக டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேக நபர் வாடகைக் காரில் வந்திருந்ததை கண்டறிந்தனர். பின்னர், வாகன இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாடகைக் கார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாகனத்தை கண்காணித்தனர்.

அதன் அடிப்படையில், வத்தளை பகுதியில் இருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தனது பாட்டியுடன் இலங்கைக்கு வந்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், இதே போன்ற முறையில் வேறு இடங்களிலும் திருட்டுச் சம்பவங்களில் அவர் தொடர்புடையவரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு