Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன் காரணமாக, நாடு முழுவதும் கடன் அட்டைகளை பயன்படுத்தும் சுமார் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றாட தேவைகள் மற்றும் செலவுகளை சமாளிப்பதற்காக பலர் கடன் அட்டைகளை நம்பியிருக்கும் நிலையில், இந்த வட்டி அதிகரிப்பு அவர்களுக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமீபத்தில் இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இதன் தாக்கம் தற்போது கடன் அட்டை வைத்திருப்பவர்களிடமும் பிரதிபலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 26 சதவீத வருடாந்த வட்டி வீதத்தை, ஜுலை முதலாம் திகதி முதல் 28 சதவீதமாக உயர்த்த சில வங்கிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைக் கடன் தொகை 194,105 மில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு