Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; சிவஞானம் அழைப்பு!

நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; சிவஞானம் அழைப்பு!

3 months ago
in செய்திகள்

யாழ்ப்பாண இராச்சியத்தின் சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றுப் பெருமையைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மந்திரி மனை அழியும் அபாயத்தில் இருந்த நிலையில், அதனைப் புனரமைப்பது தொடர்பாக நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் தற்போது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.

இருதரப்பு கலந்துரையாடல்களின் பின்னர், பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் மந்திரி மனையைப் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி தொல்லியல் திணைக்களத்திடம் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

புனரமைப்புப் பணிகளை தொல்லியல் திணைக்களமே மேற்கொள்ளவுள்ளதுடன், அதற்குத் தேவையான நிதியை பொதுமக்களின் ஆதரவுடன் திரட்டித் திணைக்களத்திடம் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து நாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நல்லூர் மந்திரி மனை அமைந்திருந்த பகுதிகளில் ஸ்கேன் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மந்திரி மனையை எவ்வாறு பாதுகாத்து புனரமைக்கலாம் என்பது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த முயற்சிக்கு அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என வலியுறுத்திய சிவஞானம், அந்தப் பகுதியில் வசிப்பவர், முன்னாள் மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாகாண சபை அவைத் தலைவர் என்ற அடிப்படையிலேயே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
Next Post
சங்கீதன் பாடல் பாடியமைக்காக கைது செய்யப்படவில்லை- அருண் ஹேமச்சந்திரா

சங்கீதன் பாடல் பாடியமைக்காக கைது செய்யப்படவில்லை- அருண் ஹேமச்சந்திரா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு