Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு யார் பொறுப்பு?; நாமல் ராஜபக்ஷ கேள்வி!

தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு யார் பொறுப்பு?; நாமல் ராஜபக்ஷ கேள்வி!

3 months ago
in அரசியல், செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையிலானதாக இருந்ததாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அதற்குப் பொறுப்புக்கூறுவது யார் என கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (9) நடைபெற்ற முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாடலைப் பாடியதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலும் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் தன்மையுடையதாக இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். அந்தப் பாடல் தொடர்பான காணொளிகள் மற்றும் பதிவுகள் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிரப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார். அவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதில் பிரச்சினையில்லை என்றாலும், அவருக்காக ஆதரவு தெரிவிப்பது குற்றமாக கருதப்படக்கூடாது என்றும் கூறினார்.

இராணுவத்தினருக்காக தாம் எப்போதும் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்த அவர், இந்த விவகாரங்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றாலும், அதனை அரசியல் மேடைகளின் பிரசார கருவியாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், இதனால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கே அநீதி ஏற்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
Next Post
கருத்துக்களை பேசுவது பயங்கரவாதம் அல்ல; வடகிழக்கு தமிழ் மக்களிடம் போய் கேளுங்கள்!

கருத்துக்களை பேசுவது பயங்கரவாதம் அல்ல; வடகிழக்கு தமிழ் மக்களிடம் போய் கேளுங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு