Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய நடவடிக்கை; அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய நடவடிக்கை; அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நோக்கில் இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் இலாபங்களுக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், விசாரணைகள் சட்டப்படி மற்றும் சுயாதீனமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடைகள் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு உரிய சான்றுகளுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், விசாரணைகள் தொடர்பாக தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களை பொதுவெளியில் பரப்புபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நாட்டில் முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடையும் சந்தர்ப்பங்களில், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது கடந்த காலங்களில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து முக்கிய விசாரணைகளும் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சிலர் வீதிகளில் போராட்டங்களை முன்னெடுப்பதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டபூர்வ விசாரணைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிட்ட அவர், அரசியல் தலையீடுகள் இன்றி சட்டத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
Next Post
11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு