உள்நாட்டில் பொதி செய்யப்பட்டு, போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 500ml-999ml போத்தல்களின் விலை 80 ரூபாவாகவும், 1L-1.49L போத்தல்களின் விலை 120 ரூபாவாகவும், 1.5L-1.99L போத்தல்களின் விலை 150 ரூபாவாகவும், 2L-2.49L போத்தல்களின் விலை 180 ரூபாவாகவும் மற்றும் 5L-6.99L போத்தல்களின் விலை 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.








