Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலி, மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள புற்றுநோய்க்கான கதிர்வீச்சு இயந்திரம்; சேவைகள் ஸ்தம்பித்தம்

காலி, மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள புற்றுநோய்க்கான கதிர்வீச்சு இயந்திரம்; சேவைகள் ஸ்தம்பித்தம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலை மற்றும் மட்டு போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் புற்றுநோய் பிரிவில் இயங்கிவந்த தலா ஒரு லீனியர் ஆக்சலரேட்டர் இயந்திரம் செயலிழந்துள்ள நிலையில், புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் கதிரியல் சிகிச்சை சேவைகள் ஸ்தம்பித்துள்ளதாகக் கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

இயந்திர செயலிழப்புத் தொடர்பு குறித்து புதன்கிழமை (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த லீனியர் ஆக்சலரேட்டர் இயந்திரம் கடந்த 4 ஆம் திகதி செயலிழந்திருந்ததுடன், காலி வைத்தியசாலையில் இருந்த இயந்திரமும் 5 ஆம் திகதியன்று செயலிழந்திருந்தது. இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதரும் புற்றுநோயாளர்கள் சிகிச்சைகளைப் பெற வழியின்றி கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் நிறுவனங்களுடனான சேவை ஒப்பந்தக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த நிறுவனங்கள் பணியிலிருந்து விலகியுள்ளமையால் செயலிழந்துள்ள இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த இயந்திரங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகச் செயலிழந்து வந்த நிலையில் அவற்றை பழுதுபார்க்கும் நடவடிக்கைகளும் காலம் தாழ்த்தியே இடம்பெற்றன.

புற்றுநோயாளர்களுக்குக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக வழங்குவது அவசியம். இவ்வாறான சிகிச்சைகளைத் தனியார் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்வதாயின் பெருமளவான பணத்தை செலவிட வேண்டி ஏற்படலாம். ஆகையால் சுகாதார அமைச்சின் உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
வெருகல் ஆற்றிலிருந்து மட்டு கொக்குவிலை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

வெருகல் ஆற்றிலிருந்து மட்டு கொக்குவிலை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு