Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா

ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரங்களில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஏற்பாடு செய்திருந்த ‘மெஹெவரக ப்ரணாமய’ (சேவைக்கு பாராட்டு) நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தனக்கு எந்தவித பதற்றமும் ஏற்பட்டதில்லை” என தெரிவித்தார்.

எனினும், மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பேசுவது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் என்றும், அவரை நோக்கி உரையாற்றும் தருணம் தனித்துவமான உணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும்

”அன்றும் இன்றும் ஜனாதிபதி யார் என்று நீங்கள் என்னிடம் கேட்டால், நான் மஹிந்த ராஜபக்ஷ என்று மட்டுமே சொல்வேன் ” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் ஆளுமை மீதான தனது மரியாதையையே இந்த கருத்து பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியைப் பிடிப்பதற்காக புலம்பெயர் தமிழர்களிடம் (டயஸ்போரா) இருந்தே பணம் வழங்கப்பட்டது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பணம் வழங்கி எதிர்பார்த்தது ஈழத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக எனவும், தற்போதைய நிலையில் புலம்பெயர் தமிழர்களையும் ஒட்டுமொத்த நாட்டையும் இந்த அரசாங்கம் பொய்களால் ஏமாற்றியுள்ளனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள்.. அதாவது புலம்பெயர் தமிழர்களின் டயஸ்போராக்கள் டில்வினுக்கு பணம் கொடுத்தது சலேயை உள்ளே தள்ளுவதற்காக அல்ல. மஹிந்த போன்ற தலைவர்களை உள்ளே தள்ளுவதற்காக ஆகும்.

மாலிமாவ (திசைகாட்டி) ஆட்சிக்கு வருவதற்கு புலம்பெயர் அமைப்பினரே பணம் கொடுத்தனர். அவர்கள் ஈழத்தை தருவார்கள் என்றே நாங்கள் நினைத்தோம்.

ஈழத்தை விடுங்கள், அவர்களால் ஒரு சாரத்தைக் கூட வாங்கித் தர முடியாத ஒரு அரசாங்கம் இது. நாடு முழுவதற்கும் பொய் சொல்லும் இந்த அரசாங்கத்திற்கு இனிமேல் நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம்” என்று கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு