Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!

எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!

2 months ago
in செய்திகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவிய போர் சூழ்நிலையை காரணம் காட்டி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாக தெரிவித்து அரசாங்கம் முன்னதாக எரிபொருள் விலைகளை அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், உலக சந்தையில் விலை உயரும்போது உள்நாட்டிலும் விலை உயர்த்தப்பட்டால், விலை குறையும் போது அதற்கேற்ப எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் என்றார்.

நாட்டில் எரிபொருளுக்கு அதிகளவிலான வரிகள் விதிக்கப்படுவதாகவும், ஆட்சிக்கு வரும் முன்பு அவற்றை நீக்கி குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

எனினும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை சரிவின் பலனை மக்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் எரிபொருள் விலைகளை மறுஆய்வு செய்து உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும், அரசாங்கம் மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

அத்துடன், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுப்பதே எதிர்க்கட்சியின் பொறுப்பு எனவும், எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பான கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
Next Post
“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!

"நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்"; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.