Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

1 hour ago
in செய்திகள்

மதவாச்சி பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றின் உரிமையாளரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 9ஆம் திகதி, மதவாச்சியில் அமைந்துள்ள சலூன் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த உரிமையாளரை தாக்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் கவனம் பெற்றது.

சம்பவம் தொடர்பாக ஜூன் 10ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கூர்மையான ஆயுதமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த தாக்குதல் கப்பம் பெறும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட போதிலும், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபருக்கும் சலூன் உரிமையாளருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மதவாச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!
செய்திகள்

“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!

June 18, 2026
எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!
செய்திகள்

எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!

June 18, 2026
126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!

June 18, 2026
Next Post
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு