முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) கைது செய்துள்ளது.
அரச நிறுவனங்கள் இரண்டிலிருந்து ஒரே காலப்பகுதியில் சம்பளம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விவகாரம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








