ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இது ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தாக்குதல் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலின் காரணமாக மொஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக விமான சேவைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா–உக்ரைன் போரின் நான்கு ஆண்டுகளைத் தொடர்ந்து இடம்பெற்ற மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மொஸ்கோவை நோக்கி நள்ளிரவில் அனுப்பப்பட்ட சுமார் 200 ட்ரோன்கள் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 555 உக்ரைன் ட்ரோன்கள் தடுத்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.







