Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவர் இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்ற சம்பவத்தை அறிந்த சிறுமி ஒருவரின் தந்தை நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நேற்று புதன்கிழமை (17) இடம் பெற்றுள்ளதையடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் உள்ள வீதியில் வசித்துவரும் 54 வயதுடைய ஆண் ஒருவர் அதே வீதியல் உள்ள 12 வயது சிறுமியின் வீட்டுக்கு வழக்கமாக சென்று வந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு அவர் சென்றுள்ள நிலையில் அங்கு அந்த சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றுள்ள நிலையில் சிறுமியும் அவரது நண்பியான பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர்.

சிறுமியின் பெற்றேர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த நபர் அந்த 12 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் பக்கத்து வீட்டு 10 வயதுடைய சிறுமியின் கைகளை பிடித்து இழுத்ததையடுத்து அவர் அங்ககிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் 12 வயது சிறுமிக்கு நடந்ததை பார்த்த பக்கத்து வீட்டு 10 வயது நண்பியான சிறுமியின் நண்பி பாடசாலையில் பகிடி செய்து வந்துள்ளார். இந்த பகிடி செய்த வந்த சம்பவம் ஆசிரியருக்கு தெரியவந்ததையடுத்து அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அழைத்து சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நேற்று புதன்கிழமை (17) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட திருமணம் முடித்து மனைவியை விவாகரத்து செய்த மற்றும் ஒரு கையும் காலும் இயங்காத 54 வயதுடைய விசேட தேவைடையவ வரை இன்று வியாழக்கிழமை (18) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதணைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதேவேளை பாலிஸ் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 12 வயது சிறுமியின் தந்தையார் தனது மகளுக்கு நடந்த கொடூரத்தையும் அவமானத்தையும் தாங்க முடியாது சம்பவ தினமான நேற்று புதன்கிழமை (17) இரவு நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் குறித்த சடலம் இன்று வியாழக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேச பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு மாதத்தில் ஒரு நாள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து இட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
Next Post
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.