Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 33 வயதுடைய பெண், அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை நுவரெலியா பொலிஸார் வெளியிட்டு, அவரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

நேற்று (17) மாலை, குறித்த பெண் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளில், குறித்த பெண் நுவரெலியாவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியில் பல நாட்கள் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.

அவருடன் விடுதியில் தங்கியிருந்த நபரே இந்த மரணத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணை தகவல்களின்படி, சந்தேக நபர் கடந்த சில தினங்களில் குறித்த பெண்ணுடன் விடுதிக்கு சென்று பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மீண்டும் பெண் தனியாக விடுதிக்கு திரும்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ நாளில் இரவு சந்தேக நபர் வாடகைக் காரில் விடுதிக்கு சென்று, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்து, பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

விடுதியில் இருந்து புறப்படும் முன் கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் விடுதி பாதுகாப்பு அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும், 2023 முதல் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றி வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறி தனது பணியை ராஜினாமா செய்யும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காதலர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் பெண்ணை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் விடுதியில் பதிவாகியுள்ளன.

எனினும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

தொடர்பு இலக்கங்கள்:
071-8591096 – உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், நுவரெலியா
071-8591097 – தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர், நுவரெலியா

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
Next Post
மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!

மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.