எல்பிட்டிய – மாபலகம பிரதான வீதியின் வதுரவில சந்திப் பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ பரவல் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளை, தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








