Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவப் பெருவிழா நேற்று (22) பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாண்டிற்கான உற்சவம் நேற்று தொடங்கியது எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் சுப முகூர்த்த வேளையில் அம்பாளின் திருக்கதவு திறத்தல் நிகழ்வுடன் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலடிப் பதியில் அமைந்துள்ள இவ்வாலயம், பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் வழிபாட்டையும் பெற்ற தலமாக விளங்குகிறது. கடலோரப் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன், தம்மை நாடி வரும் பக்தர்களின் துயரங்களை நீக்கி அருள்பாலிப்பவளாக பக்தர்களால் போற்றப்படுகிறார்.

உற்சவ காலத்தில் தினமும் விசேட பூஜைகள், வழிபாடுகள் மற்றும் சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 29ஆம் திகதி பூரணைத் திதி மற்றும் மூல நட்சத்திரம் கூடிய சுப வேளையில் அம்பாளின் பாலாமிர்த மற்றும் பஞ்சாமிர்த திருக்குளிர்த்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், நாவலடிக் கடலில் கும்பம் சொரிதல் நிகழ்வுடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் ஆசார சீலத்துடன் வருகை தந்து, அம்பாளின் அருளைப் பெற்று ஆன்மீக பலன் அடையுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!

ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு