Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோரோன் நகருக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் கராகஸில் உள்ள கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், அச்சமடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அண்டை நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மீண்டும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்த அதிர்வுகள் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
Next Post
ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!

ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு