Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து குற்றங்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக நாட்டில் தேவையான சட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது தொடர்பான பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இன்று எதிர்க்கட்சியினரே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பிரதானமாக உள்ளதாகவும், குற்றங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பலர் குற்றங்களை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அதேவேளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பொதுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது எதிர்க்கட்சியால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாஜுதீன் விவகாரம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்வாறான குற்றங்களின் பின்னணியில் அரசியல் மற்றும் அரச இயந்திரத்தின் சில பகுதிகள் இருந்ததாகவும், அவை தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வெள்ளை வேன் கடத்தல்கள் உள்ளிட்ட கடந்த கால குற்றச்செயல்களை நினைவுகூர்ந்த அவர், குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என வலியுறுத்தினார்.

மேலும், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும், பொதுமக்களும் நீதியை நிலைநாட்ட ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்வதற்கு அரசியல் அதிகாரமே காரணமாக இருந்துள்ளதாகவும், அந்த பாதுகாப்பு வலையமைப்பை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த காலத்தில் 3,390 கிலோ ஹெரோயின், 304 கிலோ கொக்கெய்ன், 5,543 கிலோ ஐஸ் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதைப்பொருள் வலையமைப்பை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்றும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை இலக்காகக் கொண்ட புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.

அத்துடன், ஆட்சியாளருக்குப் பயப்படும் சமூகம் அல்ல, ஆட்சியாளரை கேள்விக்குள்ளாக்கும் ஜனநாயக சமூகமே தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.