Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

3 months ago
in செய்திகள்

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இலங்கை நோக்கி பயணிக்க முயன்ற பெண்ணின் கடவுச்சீட்டை வெளிநாட்டவர் பதிவு மண்டல அதிகாரிகள் பரிசோதித்தபோது சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கண்டறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணைகளில், குறித்த பெண் கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டின் மூலம் இந்தியா வந்திருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இந்திய குடியுரிமை பெற்றவர் போன்று இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த 58 வயதுடைய மெரினா ஆனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 2001 ஆம் ஆண்டு இந்தியா வந்த பின்னர் குவைத்துக்கு சென்று, 2003 ஆம் ஆண்டு இந்தியாவின் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியாவில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்றவர் போன்று ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, தனது இலங்கை அடையாளத்தை மறைத்து இந்திய கடவுச்சீட்டையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மெரினா ஆனி கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த இந்திய ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு