Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

2 months ago
in உலக செய்திகள், செய்திகள்

வெனிசுலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கிளைபர் மொரான் என அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவன், லா குவைரா மாகாணத்தில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக கராகஸ் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் ஆரம்பகட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி, 58 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிந்துள்ளன.

அதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார சேவைகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச மீட்புக் குழுக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

August 15, 2026
வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை
செய்திகள்

வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

August 15, 2026
இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது
செய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

August 15, 2026
சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
செய்திகள்

சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

August 15, 2026
ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
செய்திகள்

ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை

August 15, 2026
Next Post
குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை; பொலிஸார் விசாரணை!

குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை; பொலிஸார் விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு