Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தவணை முறை அடிப்படையில் அரிசி வழங்கப்படவுள்ளதாக பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சேவை முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 28ஆவது ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கக் களஞ்சியசாலைகளில் தற்போது போதுமான அளவு நெல் கையிருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த அறுவடைப் பருவத்திற்கான நெல்லை சேமிப்பதற்காக, தற்போதுள்ள நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அரிசியை அஸ்வசும நலன்புரித் திட்ட பயனாளிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் அல்லது எளிய விநியோக முறையில் வழங்குவது தொடர்பாக மட்டுமே அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், இதனை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு அல்லது திட்டமிட்டு “தவணை முறையில் அரிசி வழங்கப்படவுள்ளது” என பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

விவசாயிகளுக்கு நியாயமான விலையையும், நுகர்வோருக்கு மலிவான விலையில் அரிசியையும் உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், அரிசி விலையை செயற்கையாக உயர்த்தும் சில நெல் ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சந்தையில் அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கீரி சம்பாவிற்கு மாற்றாக குறிப்பிட்டளவு அரிசியை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஒரு மாத காலத்திற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பு நாட்டில் இருப்பதாகவும், நெல் கொள்வனவுக்காக அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் 6,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
Next Post
முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு