Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்

சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், கார் மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற மூவர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

சனிக்கிழமை (04) அதிகாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றைச் சுற்றிவளைத்து சோதனை நடத்துவதற்காக பொலிஸார் சென்றபோது, அங்கிருந்து கார் ஒன்றில் இருவர் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான குழு துரத்திச் சென்றது.

தப்பியோடியவர்களுக்கு வழிகாட்ட மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தப்பி சென்ற காரை தலைக்கவசத்தினால் எறிந்து தடுத்து நிறுத்தி காரில் இருந்த இரு சந்தேக நபர்களையும் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே காரை மறித்து நிறுத்தி கைது செய்தார்.

இந்த நடவடிக்கையில் 32, 33 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 15 கிராம் 370 மில்லிகிராம் ஹெரோயின், சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரண்டு கைத்தொலைபேசிகள், பணம் மற்றும் வங்கி அட்டைகள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர்கள் பெருமளவிலான போதைப்பொருட்களை பல்வேறு பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பிரித்து வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணைகளில் எழுந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு