யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞர் எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தனின் புகைப்படம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பத்திரிகையின் ஆசிரியர் பீடம் விளக்கமளித்துள்ளதுடன், ஏற்பட்ட தவறுக்கு மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளத்திற்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.








