ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நிலஅதிர்வு கண்காணிப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக ஜப்பான் அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.








